10/02/2013

வருத்தப்படவில்லை

யோசிக்கிறேன் இன்று
…உன்னைப் பற்றி

…யோசிக்கிறேன் இன்று
…உன் நிலையில் இருந்து

…வருந்துகிறேன் நான்

…     தூங்காத இரவுகளுக்கான பழியை
…     உன்மீது போட்டதை நினைத்து…

     என்னைப் பிடிக்கவில்லை என்றதும்
…     உன்னைத் திட்டியதை, மிரட்டியதை நினைத்து

…     நீ காதலித்திருந்தால் இச்சமூகம்
…     உன்மீது போடவிருந்திருக்கும் பழிகளை நினைத்து

…     உன் மகிழ்ச்சியை கெடுத்துவிடுவேனோ!? என்ற பதைப்பிலேயே
…     நீ நாட்களை நகர்த்தியதை நினைத்து

…     உனக்கிருப்பதும் மனது தான்
…     என்பதை உணராததை நினைத்து

…     இன்னும் என்னென்னவெல்லாமாகவோ நினைத்து

…ஆனால் வருத்தப்படவில்லை
…நீ என்னை காதலிக்காததை நினைத்து.

30/01/2013

தேவை, தடை உருவாக்கத்தின் நிறுத்தம்

நாங்கள் யாசிக்கிறோம் தினமும்,
இறைவா எங்களுக்கு உறுதியைக் கொடு என்று

எங்கும் நிந்தனைகளின் குறி நாங்களே,
நாங்கள் அவற்றை எதிர்பார்க்கா விடினும்

இரத்தக் கண்ணீர் வடிக்கத் துடித்தாலும்
புன்னகையையே சிந்துகிறோம்.

நாங்கள் வெறுப்படைந்துள்ளோம்
யாரும் எங்களை புரிந்து கொள்ளாததால்

நாங்கள் ஆத்திரமுற்றுள்ளோம்
அவ்வெறுப்பை களைய இயலாததால்

இந்த வெறுப்பினாலும், ஆத்திரத்தினாலும் நாங்கள் பெற்ற பட்டம் 'பொறுக்கிகள்'

எங்களை செயல்பட அனுமதிக்காத உலகம்
எங்களுக்கு அளித்த பெயர் 'வெட்டிப்பயல்கள்'

எங்களிடம் இருப்பது
இளமையின் துடுக்குத்தனம் மட்டுமல்ல;
சீறிய இலட்சியங்களும்.

எங்களின் பரிதவிப்புகள் எங்களைப் பற்றியது அல்ல
எங்களின் இலட்சியங்களைப் பற்றியே!

முற்தரையை சுத்தமாக்கி பூந்தோட்டம் உருவாக்கலாம் என்றால்
குறுக்கே ஆயிரம் வேலிகள்

எதிர்பார்ப்பது பூக்களையல்ல
வேலிகளற்ற தரையை மட்டுமே

கடைசியாக நாங்கள் சொல்வது:
எங்களுக்கு உதவி தேவையில்லை,
தேவை, உங்கள் தடை உருவாக்கத்தின் நிறுத்தம்.

- மணிகண்டன்.